பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி நோக்கி இந்திய அணி!

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி நோக்கி இந்திய அணி!

Update: 2020-12-29 07:53 GMT

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி தற்போது பாக்ஸிங் டே போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் ஏற்கனவே வெற்றிபெற்றதால் இந்த போட்டியிலும் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்க ஆஸ்திரேலிய அணியும், முதல் போட்டியில் அடைந்த தோல்வியை ஈடுசெய்யும் விதமாக இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணியும் விளையாடி வருகிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அடுத்ததாக முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்துள்ளது.

அதிகபட்சமாக கேப்டன் ரஹானே 104 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.இந்நிலையில் இந்த போட்டியில் ரகானே அடித்த இந்த சதத்திற்கு பல தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சதத்தை நிறைவு செய்து விளையாடிய ரஹானே இன்று 112 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

மேலும் தனது அரை சதத்தை கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து வெளியேறினார்.இறுதியில் இந்திய அணி 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது 2வது இன்னிங்சை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை குவித்துள்ளது.

இந்திய அணியை விட தற்போது ஆஸ்திரேலிய அணி 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தி இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News