20 ஆண்டு கால டென்னிஸ், ஓய்வு பெறுகிறார் சானியா மிர்சா: பெண் குழந்தைகளுக்கு கூறிய முக்கிய அறிவுரை!

20 ஆண்டுகால டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் சானியா மிர்சா பெண் குழந்தைகளுக்கு முக்கிய அறிவுரையை கொடுத்து இருக்கிறார்.

Update: 2023-02-24 02:25 GMT

துபாய் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இரட்டையில் பிரிவுகளின் அமெரிக்காவின் மெடிசனுடன் இணைந்து களம் இறங்கிய சானியா மிர்சா நேற்று முன்தினம் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறி இருக்கிறார். இதுதான் இவர் விளையாடும் கடைசி சர்வதேச டென்னிஸ் போட்டியாக பார்க்கப்படுகிறது. இத்துடன் இவர் தனது 20 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார். இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் இடம், ஆறாவது இரட்டையர் கிராம்ஸ் லாம் பட்டம் என்று சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றவர் சானியா மிர்சா.


ஆனால் அவருக்கு பிறகு இந்தியாவில் இருந்து பெரிய அளவில் வீராங்கனைகள் தற்போது வரை உருவாகவில்லை. ஒற்றையர் உலகத் தரவரிசையில் இந்தியாவின் அங்கிதா 245 வது இடத்திலும், கர்ம தண்டி 265 வது இடத்திலும் தற்போது இருக்கிறார்கள். பெண்கள் டென்னிசில் இந்தியாவின் எதிர்காலம் குறித்து சானிய மிர்சா அவர்களிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டிருக்கிறது. அவர் தற்பொழுது அதற்கு பதில் அளித்து பெண்களுக்கு குறிப்பாக பெண்கள் ஒரு விஷயத்தில் சாதிக்க வேண்டும் என்றால் கட்டாயம் அவர்கள் இதை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.


சர்வதேச டென்னிஸில் உரிய அளவில் இந்திய வீராங்கனைகள் யாராவது ஆதிக்கம் செலுத்துவதை பார்க்க முடியுமா? என்று கேட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் அதற்கு வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. இதுதான் உண்மை நிலை என்றும் அவர் பதில் அளித்து இருக்கிறார். காரணம் பெரும்பாலான பெண் குழந்தைகள் இந்த போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்காததுதான். அவர்களுக்கு ஆசை இருந்தும் அவர்களுடைய ஆசைகள் நிறைவேற ஆசையாக இருக்கிறது. பெண் குழந்தைகள் தங்களுடைய ஆசைக்காக உங்களுடைய முடிவுகளை நீங்களே எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். உங்களுடைய முடிவுகளில் உறுதியாக இருந்து அவை வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுங்கள் என்றும் கூறு இருக்கிறார். சானியா மிர்சா தற்போது மகளிர் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணிக்கு மென்டராக ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News