சென்னை டெஸ்ட் போட்டியில் மூன்று சுழல் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் இந்திய அணி.!
சென்னை டெஸ்ட் போட்டியில் மூன்று சுழல் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் இந்திய அணி.!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மிக நீண்ட தொடரில் விளையாட இருக்கிறது முதன்முறையாக இந்த சுற்றுப்பயணத்தில் தான் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட போகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும். இதற்காக இரு அணி வீரர்களும் மூன்று கட்டாய கொரோனா பரிசோதனைகள் முடித்துவிட்டு இந்த மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மைதானத்தின் தன்மையை ஆராய்ந்த இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆகியோர் இங்கிலாந்து அணியை வீழ்த்த புதிய திட்டங்களை உருவாக்கி உள்ளதாக தெரிகிறது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி சேப்பாக்கம் மைதானம் முதல் மூன்று நாட்களில் பேட்டிங் மைதானம் கடைசி இரு நாட்களில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமாகவும் மாறிவிடும என்று தெரியவந்திருக்கிறது.இதனை வைத்துப் பார்த்தால் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் களம் இறங்குவது உறுதியாகிவிட்டது. இதன் காரணமாக மூன்றாவது சுழற் பந்து வீச்சாளரை கண்டிப்பாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இந்திய அணி திட்டமிட்டிருக்கிறது. இதற்காக வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகிய இருவருக்கும் இடையே போட்டி நிலவுவதாகவும் தெரியவந்திருக்கிறது.
இங்கிலாந்துஅணியில் அதிகமாக வலதுகை வீரர்கள் தான் இருக்கின்றார். இதன் காரணமாக இந்திய அணியின் அதிகபட்ச இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் இதனை. வைத்துப் பார்த்தால் அக்ஷர் பட்டேல் மூன்றாவது பந்துவீச்சாளராக களமிறங்குவார் பெரும் வாய்ப்பிருக்கிறது.ஒருவேளை வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டால் ஏற்கனவே இடதுகை சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் குல்தீப் யாதவ் அதிக ஓவர்கள் பந்து வீசுவார் என்றும் தெரியவந்திருக்கிறது. அக்சர் படேல் மற்றும் சுந்தர் ஆகியோர் பேட்டிங்கிலும் ஓரளவு கைகொடுக்ககூடிய வீரர்கள்.