இந்தியா, தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட்: முதலாவது ஆட்டம் நாளை தொடக்கம்!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு அவர்கள் 3 டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதில் முதல் டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 26) செஞ்சூரியனில் தொடங்க உள்ளது.;

Update: 2021-12-25 04:48 GMT
இந்தியா, தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட்: முதலாவது ஆட்டம் நாளை தொடக்கம்!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு அவர்கள் 3 டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதில் முதல் டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 26) செஞ்சூரியனில் தொடங்க உள்ளது.

அதாவது தென்னாப்பிரிக்காவின் கோட்டையாக கருதப்படும் செஞ்சூரியனில் இதுவரையில் ஆசிய அணிகள் வெற்றி பெற்றத்தில்லை என்பது வரலாறு. அதனை இந்திய அணி மாற்றுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.


கடந்த ஆண்டு 'பாக்சிங் டே'யில் ஆஸ்திரேலியாவை உதைத்த இந்திய அணியினர் தற்போது தென்னாப்பிரிக்காவையும் அசால்டா டீல் செய்வார்கள் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும். இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Daily Thanthi

Image Courtesy: Last Word On Sports

Tags:    

Similar News