ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா சாதனை!

Update: 2022-01-20 03:05 GMT

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் தற்போது நடைபெற்று வருகிறது. அதே போன்று நேற்று (ஜனவரி 19) நடைபெற்ற குரூப் பி பிரிவில் இந்தியா, அயர்லாந்து அணிகள் விளையாடியது. முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அப்போது முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 307 ரன்களை எடுத்தது.

இதில் நிதானமாக விளையாடிய ஹர்னூர் சிங் 88 ரன்னும், ரகுவன்ஷி 79 ரன்னும், ராஜ் பாவா 42 ரன்னும் எடுத்து விக்கெட்டானர்கள். கடைசி நேரத்தில் மிகவும் ஆக்ரோஷமாக ஆடிய ராஜவர்தன் 17 பந்தில் 39 ரன்களை எடுத்து ஆட்டத்தை இழந்தார்.

இதன் பின்னர் 308 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி விளையாடியது. இந்திய அணியின் பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக அயர்லாந்து 133 ரன்னுக்கு சுருண்டது. இதனால் இந்தியா 174 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியை பெற்று சாதனை படைத்தது.

Source: Maalaimalar

Image Courtesy: Scrool.in

Tags:    

Similar News