உக்ரைன் போர் விவகாரம்: ரஷ்யா, பெலாரஸ் டென்னிஸ் அணிகளுக்கு தடை!

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதை தொடர்ந்து, ரஷ்யா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் ஆகிய நாடுகள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-03-02 03:09 GMT
உக்ரைன் போர் விவகாரம்: ரஷ்யா, பெலாரஸ் டென்னிஸ் அணிகளுக்கு தடை!

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதை தொடர்ந்து, ரஷ்யா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் ஆகிய நாடுகள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தியும் ரஷ்யா கேட்காமல் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் இந்திய மாணவர் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புக்கு உலக நாடுகள் தங்களின் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு ரஷ்யா மற்றும் பெலாரஸ் அணிகள் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் உறுப்பினர் மற்றும் சர்வதேச போட்டியில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரஷ்யா மீது மேலும் பல்வேறு தடைகள் விதிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Source: Twiter

Image Courtesy: The Moscow Times

Tags:    

Similar News