சர்வதேச சதுரங்க தினம் இன்று.!
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 1924ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி இந்த சர்வதேச கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. தற்போது 150க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளது.
அனைத்துலக சதுரங்க அமைப்புகளின் கூட்டமைப்பான பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு தொடங்கப்பட்ட தினத்தை நினைவு கூறுகின்ற வகையில் ஆண்டுதோறும் ஜூலை 20ம் நாள் 'சர்வதேச சதுரங்க தினம்' கொண்டாடப்படுகிறது. இது பிரெஞ்சு மொழியில் 'ஃபீடே' எனப்படுகிறது. இதன் குறிக்கோள் 'நாம் அனைவரும் ஒரே மக்கள்' என்பதாகும்.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 1924ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி இந்த சர்வதேச கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. தற்போது 150க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளது.
வரலாறுகளில் 'அரசர்களின் விளையாட்டு' என அழைக்கப்படும் இது, தற்போது உலகளவில் மக்கள் விரும்பும் பொழுதுபோக்காகவும் குழந்தைகளின் மூளைக்கு சுறுசுறுப்பு அளிக்கக்கூடிய விளையாட்டாகவும் உள்ளது.
விஸ்வநாதன் ஆனந்த், பென்டலா ஹரிகிருஷ்ணா, விடித், பாஸ்கரன் ஆதிபன், கிருஷ்ணன் சசிகிரன், பரிமர்ஜன் நேகி, எஸ்.பி. சேதுராமன், சூர்ய சேகர் கங்குலி, கொனேரு ஹம்பி, துரோணவள்ளி ஹரிகா, சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்ட பல இந்திய சதுரங்க விளையாட்டு வீரர்கள், குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளனர்.
விஸ்வநாதன் ஆனந்த் 'கிராண்ட்மாஸ்டர்' பட்டம் வென்ற முதல் இந்தியர். அபிமன்யு மிஸ்ரா இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கர். இவர் உலகின் இளவயது 'கிராண்ட்மாஸ்டர்' ஆவார்.