சர்வதேச அலைசறுக்குப் போட்டி... நம்ம சென்னையில் விரைவில்... இந்தியாவில் முதல் முறை!

மாமல்லபுரத்தில் சர்வதேச அலைசறுக்குப் போட்டி 14ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது.

Update: 2023-04-20 01:04 GMT

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் தமிழ்நாட்டில் அலை சறுக்கு போட்டி அதாவது சர்பிங் சங்கம் சார்பில் இந்திய சர்பிங் சம்மேளனம் யஅனுமதி உடன் சர்வதேச அளவில் அலைச்சறுக்கு ஓபன் போட்டி சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த போட்டி கோலாகலமாக தொடங்குகிறது..


ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை இந்த போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இது உலக சர்பிங் லீக் போட்டி தொடருக்கு உட்பட்டதாகும். சர்வதேச அலைச்சறுக்கு போட்டி இந்தியாவில் அரங்கேறுவது இதுவே முதல்முறை. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 வெளிநாடுகளில் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் இந்த போட்டிகளில் பங்கேற்க இருக்கிறார்கள். இந்தியா சார்பில் 10 பேர் களம் காண இருக்கிறார்கள்.


போட்டியின் பரிசு தொகை 37 லட்சம். இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மூன்று தகுதி சுற்று போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. இந்த போட்டி குறித்து அறிவிப்பு சென்னையில் நடைபெற்றது. மேலும் விளையாட்டு துறை சார்பில் இரண்டு கோடியை 67 லட்சத்திற்கான காசோலை தமிழ்நாடு சர்பிங் சங்க தலைவர் அருண் அவர்களிடம் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News