ஐ.பி.எல் நண்பனே.. எனது உயிரே.. நீண்ட நாள் உறவே.. - மைதானத்தில் செல்பி எடுத்த வார்னர்!
டெல்லி கேபிடல்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுடன், டேவிட் வார்னர் செல்பிக்களை எடுக்க தொடங்கினார். அப்போது அவரை அனைவரும் உற்று நோக்கினர்.
கடந்த 2021 வரையில் சன் ரைசர்ஸ் அணியுடன் இருந்த வார்னர், டெல்லி கேப்பிடல்ஸ்காக, தன்னுடைய முன்னாள் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 92 ரன்களை எடுத்தார். இதனால் டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸை வீழ்த்துவதற்கு பெரும் பங்களிப்பு அளித்தது.
அதாவது தன்னை மிகவும் அவமானப்படுத்தி வெளியேற்றிய சன் ரைசர்ஸைக் கொலை செய்வதற்காகவே காத்திருந்தவர் போன்று விளையாடினார் வார்னர். அது மட்டுமின்றி இல்லாமல் தான் சதமெடுக்கவில்லை என்றாலும், எதிர் முனையில் இருக்கின்ற போவெலையும், தட்டிக் கொடுத்து, அடிச்சுப் பழகிக்கடா என்று ஐதராபாத்தை அசிங்கப்படுத்தியவர் வார்னர். ஆனால் இது வெறும் களத்தில் மட்டுமே, அதுவும் நிர்வாகத்துடன் மோதலே தவிர சக வீரர்களிடம் எதுவும் இல்லை. நட்பு எப்போதும் நட்புதான் என்பதை செல்பி மூலமாக டேவிட் வார்னர் நிருபித்துவிட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Source, Image Courtesy: News 18 Tamilnadu