IPL 2022 ஏலம்: ஷிகர் தவான், அஸ்வின் இத்தனை கோடியா!

ஒவ்வொரு அணியிலும் அதிகப்பட்சம் 8 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்களாகவும், 25 வீரர்களை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

Update: 2022-02-12 07:51 GMT

15வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் கடைசி நாட்களில் இந்தியாவில் தொடங்க உள்ளது. இம்முறை இரண்டு அணிகளான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் புதிதாக இணைந்துள்ளது. இதனால் இந்த முறை 10 அணிகள் மோத உள்ளது. மொத்தம் அணிகளில் 33 வீரர்கள் தக்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதில் ஒவ்வொரு அணியிலும் அதிகப்பட்சம் 8 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்களாகவும், 25 வீரர்களை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த ஏலமானது கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் வீரராக ஷிகர் தவானை ஏலம் எடுத்தலில் ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இறுதியாக பஞ்சாப் அணி 8.25 கோடிக்கு ஷிகர் தவனை ஏலத்தில் எடுத்துள்ளது. அதற்கு அடுத்து தமிழகத்தை சேர்ந்த ரவீச்சந்திரன் அஸ்வின் 5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற அணிகளும் வீரர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக இறங்கியுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: The Hans India

Tags:    

Similar News