ஐபிஎல் ஏலம்: டேவிட் மாலனை எளிதாக தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி.!

ஐபிஎல் ஏலம்: டேவிட் மாலனை எளிதாக தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி.!

Update: 2021-02-19 11:07 GMT

ஐபிஎல் 14 சீசனுக்கான ஐபிஎல் ஏலம் நேற்று சென்னையில் முதல் முறையாக நடைபெற்றது. இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தமாக 292 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் 57 வீரர்கள் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 57 வீரர்களில் 22 வெளிநாட்டு வீரர்களும் 35 இந்திய வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணி பஞ்சாப் கிங்ஸ் அணி தான். ஏனனில்  அவர்களிடம் அதிகபட்சமாக 53 கோடியை தன் வசம் வைத்திருந்தது. 

ஐபிஎல் ஏலத்தில் தொடக்கத்திலிருந்தே பெரிய வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டி வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் போரின் அலியை எடுக்க போட்டி போட்ட நிலையில் 7 கோடிக்கு சென்னை அணி போரின் அலியை எடுத்த நிலையில். அடுத்ததாக தற்போது ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ள டேவிட் மாலனை ஆரம்பம் விலையான 1.50 கோடிக்கே பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்த பிட் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரிய அதிஷ்டமாக அமைந்தது. அவரை தொடர்ந்து ஆஸ்திரேலியா வீரர் ஜெய் ரிட்சட்சன் 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அடுத்ததாக தமிழக வீரர் சாருக் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

அவரை‌ தொடர்ந்து ஆஸ்திரேலியா வீரர்கள் ஹன்டிரிக்ஸ் மற்றும் மெர்ரில் ஆகிய இருவரையும் பெரிய தொகைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டிஸ் வீரர் ஆலனை எடுத்தது. இந்திய இளம் வீரர்களில் செக்சேனா உக்ரித் சிங் மற்றும் சுஷ்ரத் குமார் ஆகிய மூன்று வீரர்களை ஏலத்தில் எடுத்தது. இந்த ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி மொத்தமாக 9 வீரர்களை ஏலத்தில் எடுத்தது.

Similar News