ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கு அடிப்படை விலை இத்தனை ஆயிரம் கோடியா?

Update: 2022-04-01 11:45 GMT

ஐபிஎல் போட்டியால் பல ஆயிரக்கணக்கான கோடிகள் வருமானம் கிடைக்கிறது. இதனால் இதன் உரிமத்தை பெறுவதற்காக தொலைக்காட்சிகள் மத்தியில் கடுமையான போட்டி நிலவும்.

அதன்படி ஐபிஎல் போட்டியை ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பி வருகிறது. இதறகு முன்னர் ரூ.16,347.5 கோடிக்கான ஒளிபரப்பு உரிமையை பெற்றிருந்தது. அதே போன்று கடந்த 2008 முதல் 2017ம் ஆண்டு வரை சோனி நெட்வொர்க் ரூ.8,200 கோடிக்கு ஒளிபரப்பு உரிமம் பெற்றிருந்தது. இதற்கிடையில் ஐபிஎல் உரிமம் இந்த ஆண்டுடன் முடிவடைவதால் அடுத்து 5 ஆண்டுக்கான ஒளிபரப்பு வழங்கும் நடைமுறையை இந்திய கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், 2023, 2027ம் ஆண்டு வரையில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமைக்கு கிரிக்கெட் வாரியம் டெண்டர் விடுத்துள்ளது. அதன்படி ரூ.32,890 கோடியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட உரிமத்தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: Inside Sport

Tags:    

Similar News