சூடு பிடிக்கும் ஆட்டம்... சென்னை மற்றும் குஜராத் முன்னிலை... யாருக்கு வாய்ப்பு!

ஐபிஎல் கிரிக்கடலில் முதல் இரண்டு இடங்களில் குஜராத் மற்றும் சென்னை இடம் பெற்று இருக்கிறது.

Update: 2023-05-08 03:55 GMT

16வது ஐபிஎல் 20 ஓவர் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுப் பிறகு மிகவும் பிரம்மாண்டமாக இந்த ஒரு தொடர் அரங்கேறி வருகிறது. இதில் நேற்றைய ஆட்டங்களில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதிக்கொண்டு இருக்கின்றன. இதில் மும்பை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் அதாவது சென்னையில் சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய வெற்றியை பதிவு செய்து இருக்கிறது.


குறிப்பாக 13 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த வெற்றி இதுவாகும், சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பித்து மும்பையை வீழ்த்தி இருக்கிறது. இதன் மூலம் சென்னை அணி தன்னுடைய சொந்த மண்ணில் 2019 ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக மும்பையில் வீழ்த்தியது. இதனால் சேப்பாக்கத்தில் மும்பை அணிக்கு எதிராக கடந்த 13 ஆண்டுகளாக வெற்றி பெறாமல் வெற்றி பெற முடியாமல் இருந்த ஒரு ஏக்கத்தை சென்னை அணி தணித்து இருக்கிறது.


சென்னை அணிக்கு இது ஆறாவது வெற்றி. மேலும் புள்ளி பட்டியல்களில் குஜராத் அணி முன்னிலையில் இருந்து வருகிறது. குஜராத் அணி எதிர்கொண்ட பத்து ஆட்டங்களில் ஏழு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கிறது, மூன்று ஆட்டங்களில் தோல்வி தழுவி இருக்கிறது.  அதை மாதிரி சென்னை அணி 11 ஆட்டங்களில் எதிர்கொண்டு ஆறு வெற்றிகளையும், நான்கு தோல்விகளையும் சந்தித்து இருக்கிறது.

Input & Image courtesy:ABP News

Tags:    

Similar News