ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தொட்ட உச்சம்.. இது 1,000-வது ஆட்டம்.. வேற மாதிரி..

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 1,000வது ஆட்டம் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

Update: 2023-05-02 01:55 GMT

தற்போது 16வது ஐ.பி.எல் தொடர் போட்டி இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. பல்வேறு அணிகளும் தங்களுடைய திறமைகளை நிரூபித்து வருகிறார்கள். புள்ளி பட்டியலில் தற்பொழுது குஜராத், ராஜஸ்தான், லக்னோ, சென்னை, பஞ்சாப் ஆகிய அணிகள் முன்னிலையில் இருந்து வருகிறது. நேற்று ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஆயிரம் ஆட்டம் நடைபெற்றது. ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் என்பது 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முதலில் அறிமுகமானது.


முதலாவது ஆட்டம் கொல்கத்தா நைட் ரைட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. தற்பொழுது 100வது ஆட்டத்திலும் இவ்விரு அணிகளுமே 2009 ஆம் ஆண்டு எதிர்கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டு குஜராத் மற்றும் பஞ்சாப் இடையிலான லீக் 900 வது ஆட்டம் அமைந்திருந்தது. இந்த இந்த நிலையில் நேற்று மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் ஆயிரம் ஆவது ஆட்டம் நடைபெற்று இருக்கிறது.


அதாவது 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஆனது. தற்பொழுது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1000வது ஆட்டத்தை எட்டி இருக்கிறது. இதை எடுத்து வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சிகள் இரு அணிகளின் கேப்டன்களும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா அவர்களும் கலந்து கொண்டு இருந்தார். இவர் சிறப்பு பரிசுகளையும் வழங்கி இருக்கிறார். முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு சிறப்பு பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News