ஐ.பி.எல். போட்டி: பெங்களூரு அணியுடன் குஜராத் இன்று மோதல்!

Update: 2022-05-19 05:01 GMT

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 13 போட்டியில் விளையாடி 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. அதே நேரத்தில் ரன் ரேட்டில் பின்தங்கியுள்ள பெங்களூரு அணியை பொறுத்தமட்டில் இன்றைய போட்டியில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டெல்லி அணி தன்னுடைய கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையிடம் தோல்வியை தழுவினால் அந்த அணி எவ்வித சிரமமும் இன்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும்.

மேலும், பெங்களூரு வெற்றி பெறும் சமயத்தில் ஐதராபாத், பஞ்சாப் அணிகளின் அடுத்த சுற்று வாய்ப்பு கனவு தகர்ந்து விடும். அது மட்டுமின்றி பெங்களூரு அணி தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது வரும் வாய்ப்பு உள்ளது. இதனால் இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்கின்ற கடுமையான நெருக்கடி பெங்களூரு அணிக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் 13 ஆட்டங்களில் விளையாடி 10 வெற்றி, 3 தோல்வியுடன் 20 புள்ளிகளுடன் முதலிட்டத்தில் இருப்பதுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இதனால் தற்போதைய ஆட்டத்தின் முடிவு அந்த அணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால் எவ்வித பதற்றத்துக்கும் இடமில்லாமல் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இன்று மும்பை வான்கமே மைதானத்தில் இன்று நடைபெறும் 67வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News