அன்று பாணிபூரி விற்ற சிறுவன்.. இன்று IPL தொடரின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்..

யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் முக்கிய களமாக IPL உள்ளது.

Update: 2023-05-13 02:18 GMT

இளம் வீரர்களை அடையாளம் காணும் ஒரு களமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இருந்து வருகிறது. குறிப்பாக சாதாரணமாக கிரிக்கெட்டை ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் இளம் வீரர்களுக்கு IPL வரப்பிரசாதமா அமைந்திருக்கிறது. அதுபோல இளம் கிரிக்கெட் வீரராக ஜெயிக்கும், ஜெய்ஸ்வாலின் வெற்றியையும் மக்கள் மனதளவில் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். செய்தியாளர்களை சந்தித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறுகையில், சதம் பற்றி நாங்கள் பேசிக் கொள்ளவே இல்லை. எங்கள் மனதில் இருந்தது எல்லாம், நெட் ரன் ரேட்டை உயர்த்த வேண்டும் என்பதுதான்.


என்னதான் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பொழுதுபோக்கு, கிரிக்கெட் புனிதத்தை சீரழிக்கிறது, வீரர்களின் காயத்தை அதிகரிக்கிறது என்று பல விமர்சனங்களை எழுதினாலும் அனைத்திற்கும் மேலாக இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் முக்கிய களமாக உள்ளது. குறிப்பாக மும்பை தெருக்களில் பாணிபூரி விற்ற சிறுவன், இன்று ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவன். விரைவில் இந்திய அணிக்காக களமிறங்கப் போகும் எதிர்கால நாயகன்.


தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, பட்லர், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோரின் அனுபவம் வாய்ந்த வீரர்களிடம் இருந்து அதிக பாடங்களை கற்றுக் கொள்கிறேன். வாழ்க்கையில் ஐபிஎல் தொடரில் பல்வேறு பாடங்களை இதில் மூலம் கற்றுக் கொண்டு இருக்கிறேன். பல்வேறு வீரர்களிலும் இணைந்து விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்து இருக்கிறது என்று தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News