IPL டிக்கெட் கிடைக்காத விரக்தி: பெங்களூருவில் ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதா?
பெங்களூருவில் டிக்கெட் விற்பனை முடிந்த பிறகும், ரசிகர்கள் கூச்சல் காரணமாக அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் பெங்களூர் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற இருக்கிறது. இதற்காக டிக்கெட் விற்பனை நேற்று முன்தினம் தொடங்கியது. அப்பொழுது நேற்று முன்தினம் ஸ்டேடியத்தில் உள்ள கவுண்டரில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது விற்பனை செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு முடிந்துவிட்டன.
எனவே நீண்ட வரிசையில் காத்திருந்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். பல மணிநேரம் டிக்கெட்டுகள் வாங்குவதற்காக காத்து இருந்த ரசிகர்கள் அங்கு பெரும் கூட்டத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தினார்கள். நீண்ட நேரம் காத்திருந்தும் ஏமாந்து போன ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
தொடர்ந்து மைதானத்தில் நுழைவு வாயிலில் கதவை தள்ளி உள்ளே நுழையும் முயன்றார்கள். சாலையோரம் வைத்திருந்த இரும்பு தடுப்புகளையும் கீழே தள்ளிவிட்டதாக தகவல்களை அறிந்த போலீசார் உடனடி அங்கு சென்று அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. அவர்கள் வெளியேற மறுத்ததால் போலீசார் தடியடி நடத்தி அந்த கூட்டத்தை கழித்தார்கள், இதனால் அங்கு பரபரப்பு நிலவி இருக்கிறது.
Input & Image courtesy: News