CSK வீரர் ஓய்வு அறிவிப்பு.. இது தான் கடைசி.. சோகத்தில் ரசிகர்கள்..
சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த அம்பத்தி ராயுடு ஓய்வு.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் தமிழகத்தில் இருந்து தான் வருகிறது. ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் திறமையான தன்னுடைய ஆட்டத்தை நிரூபித்து தற்போது பைனல் மேட்ச் வரை வந்து இருக்கிறது. சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருக்கும் பல்வேறு வீரர்கள் சிறப்பு வாய்ந்தவர்களாக தான் திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் அம்பத்தி ராயுடு 2018 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு வந்து ரசிகர்களின் அன்பை பெற்றார்.
சுமார் 203 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4329 ரன்களை அம்பத்தி ராயுடு விளாசி இருக்கிறார். இதில் ஒரு சதம் அடங்கும். 22 அரை சதம் அடங்கும். அம்பத்தி ராயுடு, கபில்தேவ் நடத்திய கிரிக்கெட் தொடரில் பங்கேற்று பிசிசிஐ இடம் தடை வாங்கி இருந்தார். அதன் பிறகு பிசிசிஐ யிடம் பொதுமனிப்பு பெற்று, ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். தனது ஓய்வு முடிவு குறித்து அறிவித்த அம்பத்தி ராயூடு, மும்பை சிஎஸ்கே என இரண்டு மிகப்பெரிய அணிகள், 204 போட்டிகள், 14 சீசன்ங்கள்,11 பிளே ஆப், 8 இறுதிப் போட்டி, ஐந்து கோப்பை ,ஆறாவது கோப்பை இன்று வெல்வேன் என நம்புகிறேன் என்று கூறி தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்து இருந்தார்.
இது என் வாழ்நாளில் மறக்க முடியாத பயணம். இன்று இரவு நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டி உடன் நான் ஓய்வு பெற போகிறேன். இந்த தொடரில் விளையாடியதை மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறேன். அனைவருக்கும் நன்றி. இந்த ஓய்வு முடிவில் இருந்து திரும்பப் போவதில்லை என்றும், ராயூடு கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News