IPL தொடரின் கோப்பை யாருக்கு.. சென்னை Vs குஜராத்.. BCCI கொடுத்த ட்விஸ்ட்..

இறுதிப்போட்டி ரிசர்வ் நாளில் நடக்கும் என்று அறிவிப்பு.

Update: 2023-05-30 04:05 GMT

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு குஜராத் - சென்னை அணிகள் முன்னேறியுள்ளன. இந்த போட்டிக்கானது நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற வேண்டிய சூழ்நிலையில் இருந்தது ஆனால் இரவு ஏழு மணிக்கு அகமதாபாத்தில் மழை பெய்த காரணத்தினால் அந்த போட்டி நடைபெறவில்லை. அகமதாபாத்தில் திடீரென பெய்த கனமழையால் ஆட்டம் இன்று இரவுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணியளவில் தொடங்கிய நிலையில், சில நிமிடங்கள் மட்டும் கேப் விட்டு தொடர்ந்து பெய்தது. இதனால் ரசிகர்கள் நம்பிக்கை இழந்தனர்.


இரவு 11 மணி வரை காத்திருந்த நடுவர்கள், குஜராத் - சென்னை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி ரிசர்வ் நாளில் நடக்கும் என்று அறிவித்தனர். ஓவர்களை குறைக்காமல் ஆட்டத்தை ரிசர்வ் நாளில் நடத்த பிசிசிஐ எடுத்த முடிவு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்று மாலையிலும் அகமதாபாத்தில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஒருவேளை இன்றும் போட்டியை நடத்த முடியவில்லை என்றால், என்ன நடக்கும் என்பது அறிவிக்கப் பட்டுள்ளது. புள்ளி பட்டியல் அடிப்படையில் இந்த அணி அதிகமான கோர் வைத்து இருக்கிறதோ அந்த அணி வெற்றுக் கோப்பையை வைத்துக் கொள்ளும் என்று கூறப்பட்டு இருக்கிறது. அந்த அணி வெற்றி பெற்ற அணிக்காக இருக்கும். அதாவது புள்ளி பட்டியலில் தற்போது குஜராத் முன்னிலை வகிக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News