தோல்வியுடன் பிள்ளையார் சுழி போட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்: இனி எல்லாம் அதிரடி தான்!
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் தற்பொழுது குஜராத்திற்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியதன் காரணம் என்ன.?
பதினாறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா தற்பொழுது பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. குறிப்பாக கிரிக்கெட் திருவிழா அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் முன்தினம் பிரம்மாண்டமாக தொடங்கியது. இதற்கு தொடக்க ஆட்டத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அடங்கிய ஏற்பட்டன. இதில் ஹிந்தி பாடகர் அர்ஜித் சிங் பாடி உற்சாகப்படுத்தினர். அதனை தொடர்ந்து தமிழ் நடிகை தமன்னா மற்றும் ராஷ்மிகா ஆகியோர் நடனமாடி அசத்தி இருந்தார்கள்.
தொடக்க விழாவிற்கு பிறகு சென்னை குஜராத் அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் நடைபெற்றது. முதலாவது ஆட்டத்தில் குஜராத் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி தற்போது தோல்வியை தழுவி இருக்கிறது. புதிய விதிமுறைகளின் படி களம் இறக்கிய மாற்று வீரர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற ஒரு நோக்கில் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள்.
இந்த முறை டாஸ்க் ஜெயித்த குஜராத் அணி முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்யுமாறு சொன்னது. அதன் பெயரில் சென்னை அணி தன்னுடைய பேட்டிங்கை பிரமாதமாக நடத்தியது. குறிப்பாக 179 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இருந்தது. வழக்கம்போல் தன்னுடைய எட்டாவது வரிசை பேட்டிங்கில் கேப்டன் தோனி களம் இறக்கப்பட்டார், கிட்டத்தட்ட 11 மாதங்களுக்குப் பிறகு அவர் ரசிகர்கள் முன்னிலையில் ஆரவாரமாக களம் இறங்கினார். ஆனால் குஜராத் அணி 179 ரன்கள் நோக்கி ஆடிய போது கடைசியில் 185 ரன்கள் குறித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தழுவியது. கடந்த சீசன் போல இந்த முறையும் சென்னை அணி தோல்வியுடன் தொடங்கி இருக்கிறது. இனி ஆட்டம் அதிரடியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Input & Image courtesy: Times of India