ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷிப் சூப்பர்.. வைத்த நம்பிக்கையை காப்பாற்றி அசத்திய யாஷ் தயாள்..

நம்பிக்கையுடன் பாண்டியா கொடுத்த வாய்ப்பு, முதல் ஓவரிலேயே அசத்திய யாஷ் தயாள்.

Update: 2023-05-17 03:34 GMT

ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் தற்பொழுது குஜராத் அணி அபார வெற்றி பெற்று இருக்கிறது. குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா திகழ்ந்து வருகிறார். இவர் தன்னுடைய அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு சரியான ஒரு வழியை காட்டி தருகிறார். குறிப்பாக அவர்களுக்கு தகுந்த நேரத்தில் உதவியாக இருந்த அவர்களால் எதை செய்ய முடியுமோ? அதை அவர்களுக்கு சரியாக சொல்லிக் கொடுத்து வெற்றி பெற வைத்து உள்ளார். இதற்கு முன்பு அகமதாபாத் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக குஜராத் அணி மோதியது. இதில் குஜராத் அணி படுமோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது.


கடைசி ஓவரில் 29 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில், கே.கே.ஆர் அணியின் ரிங்கு சிங் 5 சிக்சர்களை விளாசி அற்புதம் நிகழ்த்தினார். அந்த ஓவரை வீசிய யாஷ் தயாள் மனமுடைந்து மைதானத்தில் நடந்துவந்த காட்சிகள் ரசிகர்களிடையே வேகமாக பரவியது. அந்த ஒரு போட்டிக்குப் பிறகு யாஷ் எந்த ஒரு போட்டிகளிலும் விளையாடவில்லை காரணம் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் சுமார் 7 கிலோ வரை எடை குறைந்து இருக்கிறார்.


அந்தப் போட்டிக்கு பின் யாஷ் தயாள் குஜராத் அணியில் மீண்டும் வரவேண்டும் என்பதற்காக ஹர்திக் பேசியிருக்கிறார். பேசியதோடு மட்டுமல்லாமல் காய்ச்சலில் இருந்து யாஷ் மீண்டு வருவதற்கு பக்கத்துணையாக இருந்திருக்கிறார். காய்ச்சலில் இருந்து மீண்டு வந்துள்ள யாஷ்க்கு வாய்ப்பும் வழங்கி ஹர்திக் பாண்டியா அசத்தியுள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் யாஷ் இம்பேக்ட் பிளேயராக குஜராத் அணி களமிறக்கியது. இந்த ஒரு போட்டியில் தன்னுடைய முழு திறமையும் யாஷ் வெளிப்படுத்தி இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News