சி.எஸ்.கே.வை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி அணி!
ஐபிஎல் தொடர் 50வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதியது. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஐபிஎல் தொடர் 50வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதியது. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதே போன்று பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் கெய்க்வாட், டூப்ளஸிஸ் களமிறங்கினர். இரண்டு பேரையும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த நிலையில் டூப்ளஸிஸ் 10 ரன்களிலும், ரூத்ராஜ் கெய்க்வாட் 13 ரன்களிலும் ஆட்டமிழிந்து ஏமாற்றமளித்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய உத்தப்பா 19 ரன்களிலும், மொயின் அலி 5 ரன்களிலும் ஆட்டமிழந்தார். கேப்டன் தோனியும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அம்பதி ராயுடு மட்டும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 55 ரன்களை குவித்தார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 136 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கினர். பிரித்வி ஷா 19 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ஷிகர் தவான் நிதானமாக ஆடினார். பிரித்வி ஷாவைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐய்யர் 2 ரன்களில் ஆட்டமிழந்ததால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.
மேலும், ரிஷப் பன்ட் 15 ரன்களும், ரிபல் பட்டேல் 18 ரன்களும் எடுத்து ஆட்டத்தை இழந்தனர். நிதானமாக ஆடிய ஷிகர் தவன் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்ரதல் தாகுர் பந்துவீச்சில் ஆட்டத்தை இழந்தார். இதன் பின்னர் ஷிம்ரோன் ஹெட்மெய் நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். டெல்லி அணி 19.4 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.
Source: News 18 Tamil Nadu
Image Courtesy: Hindustan Times