மகாராஷ்டிராவில் மட்டுமே ஐ.பி.எல். போட்டி நடத்தப்படுமா? அட்டவணை விரைவில் அறிவிப்பு!

Update: 2022-02-19 09:52 GMT
மகாராஷ்டிராவில் மட்டுமே ஐ.பி.எல். போட்டி நடத்தப்படுமா? அட்டவணை விரைவில் அறிவிப்பு!

15வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2ம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் புதிதாக லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகள் பங்கேற்க உள்ளது.

மொத்தம் 10 அணிகள் பங்கேற்பதால் போட்டியின் ஆட்டங்கள் 74 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரே இடத்தில் ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் போட்டிகள் நடைபெறுகிறது.

இதில் மும்பை, புனேயில் உள்ள 5 மைதானங்களில் போட்டி நடைபெற உள்ளது. வான்கடே, டி.ஒய்.பட்டீல், பிரபோர்ட், நவி உள்ளிட்ட மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News