ஐபிஎல் வரலாற்றிலேயே கடைசி இரு லீக் போட்டிகளும் ஒரே நேரத்தில் நடைபெறும்! காரணம் என்ன?
நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி இரண்டு லீக் ஆட்டங்களும் ஒரே நேரத்தில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், அக்டோபர் 10ம் தேதி இரண்டு ஆட்டங்கள் நடைபெறுதாக இருந்தது.

இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மும்பை, ஐதராபாத் இடையேயான போட்டியும், பெங்களூரு, டெல்லி இடையேயான போட்டியும் மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் தொடங்கும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
பிற்பகலில் நடைபெற்று வரும்போது தொலைக்காட்சிகளின் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Puthiyathalamurai