#IPL கடைசி இடத்திலிருந்த பஞ்சாப் தொடர் வெற்றிகளை குவிப்பு!
#IPL கடைசி இடத்திலிருந்த பஞ்சாப் தொடர் வெற்றிகளை குவிப்பு!
ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி துபாய் இன்டேர்னோஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய ப்ரித்திவ் ஷா 7 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் ஷ் ரேயஸ் ஐயர் 14 ரன்னில் அவுட் ஆகினார். பன்ட் 14 ரன்களில் அடுத்தே அவுட் ஆகினார். ஆனால் மறுமுனையில் நிலைத்து அதிரடியாக விளையாடிய ஷிகர் தவண் அதிரடியாக தொடர்ந்து இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஷிகர் தவனை தவிர மற்ற எந்த வீரரும் பெரிய ரன்கள் அடிக்கவில்லை. அதன் காரணமாக டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 164 ரன்கள் சேர்த்தனர். பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் கேப்டன் கே.எல். ராகுல் 15 ரன்னில் அவுட் ஆக அடுத்த கொஞ்ச நேர்த்தில் மயாங்க் அகர்வால் 9 ரன்கள் மட்டுமே அடித்து அவுட் ஆக கெய்ல் 29 ரன்கள் அடித்து அதே ஓவரில் அவுட் ஆக பஞ்சாப் அணி 56/3 என்ற நிலைக்கு சென்றது. பின்னர் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வேல் மற்றும் பூரண் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தோய்வில் இருந்து மீண்டது பஞ்சாப் அணக பூரண் அரைசதம் வீளாசினார். பின்னர் வந்த ஹூடா மற்றும் நிஷம் 15 மற்றும் 10 ரன்கள் அடிக்க பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.