#IPL பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டத்தால் மும்பை அணி கதறல்!
#IPL பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டத்தால் மும்பை அணி கதறல்!
ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த போட்டி முக்கியமான போட்டி என்பதால் இந்த போட்டியை கட்டாயம் வெல்ல வேண்டிய என்ற நிலையில் விளையாடியது.
முதலில் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர் டி காக் 6 ரன்னில் வெளியேற பின்னர் இஷான் கிஷன் உடன் இணைந்த சூரியக்குமார் யாதவ் நிலைத்து விளையாட இரண்டாவது விக்கெட்டிற்கு 83 ரன்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷன் 37 ரன்னில் அவுட் ஆக சூரியக்குமார் யாதவ் 40 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த சவுரோ திவாரி 34 ரன்கள் சேர்க்க கேப்டன் பொல்லார்ட் 6 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இதனை தொடர்ந்து களம் இறங்கிய ஹர்டிக் பாண்டியா அதிரடியாக 60 ரன்கள் குவிக்க மும்பை அணி வழக்கம் போல் கடைசி நேரத்தில் பெரிய ஸ்கோரை அடைந்தது. மும்பை அணி ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 196 என்ற இலக்கை நிர்ணயித்தது.
பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்கமே சரிவில் அமைய ராபின் உத்தப்பா 13 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த கேப்டன் ஸ்மித் 11 ரன்னில் வெளியேற ராஜஸ்தான் தடமாறும் என எதகர்பாத்தால் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம்சன் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி வலுவான மும்பை அணியின் பந்து வீச்சுக்களை சிதறடித்தது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அற்பதமான சதத்தை பூர்த்தி செய்ய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.