#IPL பெங்களுரை சிதறடித்த ஐதராபாத்!

#IPL பெங்களுரை சிதறடித்த ஐதராபாத்!

Update: 2020-11-01 09:04 GMT

ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டி ஷார்ஷா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. முதலில் களம் கண்ட பெங்களுரு அணியில் தொடக்க வீரர்கள் பிலிப்ஸ் மற்றும் தேவ்தேத் படிக்கல் இருவரும் களம் இறங்க படிக்கல் 5 ரன்னில் வெளியேற பின்னர் வந்த கேப்டன் வீராட் கோலி 7 ரன்னில் அவுட் ஆகி பெவுலியன் திரும்ப அடுத்து வந்த டி வில்லியர்ஸ் பிலிப்ஸ் சற்று அதிரடி காட்ட டி வில்லியர்ஸ் 24 ரன்னில் அவுட் ஆகினார்.

அடுத்து வந்த வாஷிங்க்டன் சுந்தர் சற்று நிலைத்து விளையாட பிலிப்ஸ் 32 ரன்னில் அவுட் ஆக தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்தது பெங்களுரு அணி. வாஷிங்க்டன் 21 ரன்னிலும் குர்கிரித் மான் 15 ரன்னிலும் அவுட் ஆக அடுத்து வந்த மோரிஸ் 3 ரன்னிலும் உடானா டக்அவுட் ஆக பெங்களுரு அணி 20 ஓவர்கள் முடிவில் 120 ரன்கள் மட்டுமே அடித்தது.

பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர் கேப்டன் வார்னர் 8 ரன்னில் வெளியேற பின்னர் வந்த மனிஷ் பான்டே சாஹா உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி சாஹா 39 ரன்களும் மனிஷ் பான்டே 26 ரன்களும் சேர்க்க சன்ரைசர்ஸ் அணி வெற்றி நோக்கி சென்றது. கடைசி நேரத்தில் ஹோல்டர் 10 பந்தில் 25 ரன்கள் அடிக்க 15வது ஓவரிலேயே வெற்றியை ரூசித்தது சன்ரைசர்ஸ் அணி.

Similar News