இந்தியா அணியின் தோல்விக்கு கோலியின் ஆர்சிபி கோட்டா தான் காரணமா.!
இந்தியா அணியின் தோல்விக்கு கோலியின் ஆர்சிபி கோட்டா தான் காரணமா.!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் பின்ச் 114 ரன்களையும், ஸ்மித் 105 ரன்களும், டேவிட் வார்னர் 69 ரன்களை குவித்தனர்,
இதன் பின்னர் 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டும் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் இந்திய அணியில் இன்று ஆர்சிபி அணியின் இளம் வீரர் நவ்தீப் சைனி இறக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இவருக்கு முதுகில் காயம் இருக்கிறது. இவர் இன்னும் முழு பிட்னசில் இல்லை. ஆனாலும் இவர் அணியில் எடுக்கப்பட்டார்.
இவர் காயமாக இருக்கிறார் என்பதால்தான் ஒருநாள் தொடரில் நடராஜனை எடுத்தனர். ஆனால் இன்று நடராஜனை களமிறக்காமல் நவ்தீப் சைனியை களமிறக்கினார்கள். ஆர்சிபி அணியில் கோலியின் கேப்டன்சிக்கு கீழ் நவ்தீப் சைனி ஆடி வருகிறார். முதல் தர போட்டியிலும் இவர் நன்றாக ஆடி வருகிறார். இந்த நிலையில் தற்போது நவ்தீப் சைனியை கோலி களமிறக்கி உள்ளார்.
கே. எல் ராகுல் , மயங்க் அகர்வால் போன்ற முன்னாள் பெங்களூர் வீரர்கள், சாகல் போன்ற இந்நாள் பெங்களூர் வீரர்களை கோலி ஆடும் அணியில் எடுத்துள்ளார். ஆனால் இன்று நவ்தீப் சைனி சரியாக பந்துவீசவில்லை.