முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் விளையாடுவது குறித்து சந்தேகம் தான்.!
முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் விளையாடுவது குறித்து சந்தேகம் தான்.!
ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது மிக நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி ஒருநாள் மற்றும் டி20 தொடரை முடித்த கையோடு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 17ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக துவங்க உள்ளது. இந்த போட்டியை வெற்றிகரமாக துவங்க இரு அணிகளுமே மும்முரம் காட்டும் என்று தெரிகிறது. மேலும் தற்போது இரு அணிகளுக்கும் இடையே பயிற்சி போட்டி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்திய வீரர் கே.எல். ராகுல் இந்த ஆஸ்திரேலியா தொடரில் ஒரு நாள் போட்டி தொடரில் சொதப்பினாலும் டி-20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இருப்பினும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுல் இடம்பெறுவது கடினம் என தெரிய வருகின்றது.
காரணம் துவக்க ஜோடியாக மாயங்க் அகர்வால் மற்றும் பிரித்திவ் ஷா களம் இறங்க வாய்ப்பு உள்ளது. மேலும் சுக்மான் கில் துவக்க வீரர் பட்டியலில் உள்ளார். இவர்கள் இல்லாமல் கே.எல் ராகுல் துவக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு குறைவு .
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வீராட் கோலி நாடு திரும்புவதால் இரண்டாவது போட்டியில் கே.எல் ராகுல் இடம்பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் இடம் கிடைப்பது சந்தேகமே. அதேபோல் ரோஹித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பிடிப்பார் என தெரிகின்றது.