வேகப்பந்து வீரர் ஒருவர் கேப்டனாக பணியாற்றுவது எளிதானது அல்ல: டிராவிட்!

Update: 2022-07-02 11:33 GMT

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று (ஜூலை 1) தொடங்கிய 5வது டெஸ்டில் இந்திய அணிக்கு கேப்டனாக வேகப்பந்து வீரர் பும்ரா பணியாற்றினார். அதாவது ரோகித் சர்மா கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்தது. மேலும், கபில்தேவுக்கு பின்னர் கேப்டன் பொறுப்பை வகித்த வேகப்பந்து வீரர் என்கின்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வேகப்பந்து வீரரான பும்ரா கேப்டனாக பணியாற்றுவது மிகவும் எளிதானது கிடையாது என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: பும்ரா எப்போதும் தன்னுடைய பந்து வீச்சில் கவனமுடன் இருப்பார். ஆட்டத்தின் போக்கினை கணிப்பதில் மிகவும் வல்லவராக திகழ்கிறார். ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்றவாறு திறமையுடன் பந்து வீசக்கூடியவர் ஆவார்.

பும்ரா இதுவரையில் கேப்டனாக இருந்தது கிடையாது. இதன் காரணமாக புதிய பொறுப்பு அவருக்கு சவாலானதாக இருக்கும். இருந்த போதிலும் எங்களின் ஆதரவை அவருக்கு தொடர்ந்து அளிப்போம். அதிலும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக செயல்படுவது சாதாரணமான காரியம் கிடையாது. இவ்வாறு ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News