இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.
அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டேரில் மிட்செல், பிளெண்டல் இரண்டு பேரும் சதமடித்தனர். டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டத்தை இழந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட் மற்றவர்கள் தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்நிலையில், நியூசிலாந்து அணியின் டாம்லாதம் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 650 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi