லங்கா பிரிமியர் லீக் டி-20 தொடரில் முதல் சம்பியன் பட்டத்தை வென்றது ஜப்புனா அணி.!
லங்கா பிரிமியர் லீக் டி-20 தொடரில் முதல் சம்பியன் பட்டத்தை வென்றது ஜப்புனா அணி.!
இந்தியாவில் நடைபெறும் டி-20 தொடர் போன்றே இலங்கை கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் டி-20 கிரிக்கெட் லாங்கா பிரிமியர் லீக் தொடர். இந்த தொடர் முதன் முறையாக இலங்கையில் இந்தாண்டு தொடங்கப்பட்டு நடைபெறுகின்றது. இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து அரையிறுதி போட்டிகள் நடைபெற்று நேற்று இறுதி போட்டியில் ஜப்புனா அணி முதன் முறையாக கோப்பையை வென்று அசத்தி உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜப்புனா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஜப்புனா அணியில் அவேஷ்கா பெர்னாடோ 27 ரன்களும் சார்லெஸ் 26 ரன்களும் அடித்தனர். பின்னர் விளையாடிய மார்லிக் 46 ரன்கள் குவிக்க பெரேரா மற்றும் டி சில்வா அதிரடி காட்ட ஜப்புனா அணி 188 ரன்கள் குவித்தது.
அதன் பின்னர் விளையாடிய காலே அணியில் கேப்டன் ராஜாபகா மட்டும் அதிரடியாக 17 பந்தில் 40 ரன்கள் குவிக்க மற்ற வீரர்கள் சொதப்பியதால் ஜப்புனா அணி முதல் சம்பியன் பட்டத்தை வென்றது.
ஜப்புனா அணியில் நட்சத்திர வீரர்கள் மாலிக், திசேரா பெரேரா மற்றும் டி சில்வா போன்ற வீரர்கள் பெரிய பங்கு வகித்தனர்.