இந்திய அணியை சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகவும் கடினம் தான் - ஜாஸ் பட்லர்.!

இந்திய அணியை சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகவும் கடினம் தான் - ஜாஸ் பட்லர்.!

Update: 2021-02-02 08:47 GMT

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் முடித்திருக்கும் இந்திய அணியும் இலங்கையில் சுற்றுப்பயணம் முடித்திருக்கும் இங்கிலாந்து அணியும் அடுத்தாக மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாட இருக்கிறது.பிப்ரவரி மாதம் 5ம் தேதியிலிருந்து இந்த இரு அணிகளுக்கிடையேயான  தொடர்கள்தொடங்குகிறது. இந்த இரு அணிகளும் முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலுள்ள சேப்பாக்கம் மைதானத்திலும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர் ஜோஸ் பட்லர் கூறியதாவது, இந்திய அணிக்காக விராட் கோலி கடைசியாக மூன்று போட்டிகளில் பங்கெடுக்கவில்லை, இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிராக இவர் மிக சிறப்பாக செயல்படுவார், மேலும் அதிகமான ரன்களை குறைப்பதிலும் தனது கேப்டன்ஷிப்பிலும் ஆக்ரோஷமாக செயல்படுவார் என்று தெரிவித்தார்.

விராட் கோலியை சமாளிப்பது என்பது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரும் ஒரு சோதனையாகவே அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாத நிலையிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி வெற்றி பெற்றது இதன் மூலம் இந்திய அணி ஒரு மிக சிறந்த மற்றும் பலமான அணி என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டது. இந்நிலையில் பலம் வாய்ந்த இந்திய அணியுடன் மோதுவது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார. எந்த அணியாக இருந்தாலும் அதன் சொந்த மண்ணில் மிக சிறப்பாக செயல்படும். அந்தவகையில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் அதனை இதை சிறப்பாக எதிர்கொள்வோம் என்று அவர் தெரிவித்தார்.

Similar News