இந்திய அணியில் இந்த வீரரின் விக்கெட்டை வீழ்த்துவதே கடினம் என ஜோ ரூட்!

இந்திய அணியில் இந்த வீரரின் விக்கெட்டை வீழ்த்துவதே கடினம் என ஜோ ரூட்!

Update: 2021-02-07 12:59 GMT

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக தற்போது இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் என மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. இதில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த ஐந்தாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து அதிரடியாக விளையாடி வருகிறது. தற்போது 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது.

இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் (218), சிப்லி 87 மற்றும் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இருக்கின்றனர். இந்திய பந்துவீச்சாளர்கள் அஸ்வின், பும்ரா, இசாந்த் சர்மா, நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர்.இந்நிலையில், இந்த முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுவதற்கு முன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இந்திய வீரர்கள் குறித்து பேசியிருக்கிறார்.

இந்திய டெஸ்ட் வீரரான புஜாராவின் விக்கெட் வீழ்த்துவது தான் எங்களுக்கு சவாலானதாகவும் மிகப்பெரிய விக்கெட்டாகவும் இருக்கிறது என்று ஜோ ரூட் கூறி இருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய ஜோ ரூட் :“இலங்கையில் இரண்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நாங்கள் புதிய நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்திய டெஸ்ட் வீரரான புஜாரா சிறந்த வீரர் ஆவார்.

யார்க்‌ஷைர் அணிக்காக புஜாரா விளையாடிய போது நானும் ஒரு சில போட்டிகளில் அவருடன் இணைந்து விளையாடி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவரை போன்ற ஒரு வீரரை நான் கண்டது கிடையாது.இந்திய அணியில் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்துவது தான் கடினமாக இருக்கும். அவரது விக்கெட்டை வீழ்த்துவது சுலபம் கிடையாது” என்று ஜோ ரூட் பேசியிருக்கிறார்.

Similar News