இந்திய அணிக்கு தனது 100வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வெழுத்து வாங்கும் ஜோ ரூட்!

இந்திய அணிக்கு தனது 100வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வெழுத்து வாங்கும் ஜோ ரூட்!

Update: 2021-02-06 12:11 GMT

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இந்த தொடரின் முதல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று துவங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, அந்த அணியின் துவக்க வீரரான பர்ன்ஸ் 33 ரன்கள் கொடுத்து சுமாரான துவக்கம் கொடுத்தார்.

இதன்பின் வந்த லாரன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட் – டோமினிக் சில்பி ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு பொறுமையாக ரன் சேர்த்தனர்.சிறப்பாக ஆடிய சிப்ளி அரைசதம் அடிக்க, டீ பிரேக்கிற்கு பின்னர் ரூட்டும் அரைசதம் அடித்த ரூட், வேகமாக ஸ்கோர் செய்து சதமடித்தார்.

இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட்டில் ஒரு இரட்டை சதம் மற்றும் ஒரு சதமடித்துவிட்டு அதே தன்னம்பிக்கையுடன் இந்தியாவிற்கு வந்த ஜோ ரூட், தனது ஃபார்மை தொடர்ந்துவருகிறார். இந்தியாவுக்கு எதிராகவும் சதமடித்துள்ளார்.ரூட்டுடன் இணைந்து சிறப்பாக ஆடிய சிப்ளியும் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தார்.

களத்தில் நங்கூரமிட்டு சிறப்பாக ஆடிய ரூட் மற்றும் சிப்ளி ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறிய நிலையில், முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரின் 3வது பந்தில் சிப்ளியை 87 ரன்களுக்கு வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார் பும்ரா.

முதல் நாள் ஆட்டம் முடிய வெறும் 3 பந்துகள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், சிப்ளி ஆட்டமிழந்ததுடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.இந்தநிலையில், தனது 100வது போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஜோ ரூட், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தங்களது 100வது போட்டியில் சதம் அடித்த வீரர்கள் வரிசையில் 9வது இடத்தை பிடித்துள்ளார்.

Similar News