சீனியர் உலக கோப்பையை வெல்வதை இலக்கு: இந்திய வீராங்கனை பேட்டி!
அடுத்ததாக சீனியர் உலக கோப்பை வெல்வது தன்னுடைய இலக்கு என்று இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா பேட்டி.
தென்னாபிரிக்காவில் நடந்த பெண்களுக்கான முதல் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா முதல் முறையாக தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா அனுபவித்த முதல் உலகக் கோப்பை இதுதான். அடுத்தது தென்னாப்பிரிக்காவில் 10 அணிகள் பங்கேற்கும் எட்டாவது சீனியர் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற பத்தாம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறுகின்றது. இதில் இந்திய அசத்துமா? என்று எதிர்பார்ப்பும் தற்பொழுது ரசிகர்கள் மனதில் எழுந்து இருக்கிறது.
சீனியர் உலக கோப்பை கிரிக்கெட் அணி வழி நடத்துகின்ற 19 வயதான ஷபாலி வர்மா சீனியர் அணியிலும் பிரதான கேப்டனாக அங்கம் வகிக்கிறார். சீனியர் கோப்பை வெல்வது இவருடைய இலக்காக இருக்கிறது. குறிப்பாக இவர் ஒரு பேட்டியின் போது கூறுகையில், என்னிடம் என்ன இருக்கிறது. அதில் நான் எனது முழு கவனமும் இருக்கும் அந்த வகையில் 19 வயதுக்குட்பட்டுவதற்கான அணியில் நுழைந்த பொழுது உலக கோப்பை வெல்வது மட்டுமே எனது முழு கவனமாக இருந்தது. வீராங்கனைகளிடம் நான் சொன்ன ஒரே விஷயம், உலக கோப்பையை வென்றாக வேண்டும் அதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம் என்பதுதான் இன்று அதை செய்து காட்டியிருக்கிறோம்.
இந்த வெற்றியின் மூலம் கிடைத்து நம்பிக்கையை தொடர்ந்து அடுத்து சீனியர் உலக கோப்பை போட்டிக்கு செல்வேன். இந்த வெற்றியை மறந்து விட்டு சீனியர் அணியினருடன் கைகோர்த்து உலக கோப்பை பல்ல முயற்சி செய்வேன் என்று கூறுகிறார். என்னை பொறுத்தவரை இதை மிகப் பெரிய சாதனையாக பார்க்கிறேன். இதில் கிடைத்த அனுபவங்களில் இருந்து மேலும் கற்றுக் கொண்டேன் இந்தியாவுக்காக தொடர்ந்து நிறைய ரன்கள் கொடுக்க முயற்சி செய்வேன். இந்த ஒரு உலக கோப்பையோடு மன நிறைவு அடைந்துவிடப் போவதில்லை, இது வெறும் தொடக்கம்தான் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Maalaimalar