ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து: இந்தியாவில் தொடக்கம்!
16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் இன்று தொடக்கம்.
16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் தொடங்குகிறது. பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி 2008 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி ஏழாவது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் உள்ள புவனேஸ்வர், கோவா, மும்பை ஆகிய நகரங்களில் இன்று முதல் தொடங்கி 30ஆம் தேதி வரை நடக்கிறது. முதலில் இந்த போட்டி கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்த திட்டமிட்டபடி இருந்தது. கொரோனா பரவல் காரணமாக அப்பொழுது ரத்து செய்யப்பட்ட இந்த போட்டி மீண்டும் இந்தியாவிலேயே நடத்த சர்வதேச கால்பந்து வாய்ப்பு வழங்கியது.
இன்று ஆரம்பிக்கும் இந்த கால்பந்து விழாவில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவு போட்டியை நடத்தும் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய அணியினர், பி பிரிவு ஜெர்மனி, நைஜீரியா, சிலி, நியூசிலாந்து, பி பிரிவில் நடப்புச் சாம்பியன் ஸ்பெயின், கொலம்பியா, மெக்சிகோ, டி பிரிவில் முன்னாள் சாம்பியன் ஆன பிரான்ஸ் அறிமுக அணியான டான்சியா, கனடா இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்றொரு அணிகளுடன் தல ஒருமுறை மோதும் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவுகளும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் தகுதி பெறும். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரி உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் மற்றும் பி அண்ட் டி பிரிவில் ஆட்டம் கோவாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில், சி பிரிவு ஆட்டங்கள் மும்பையில் உள்ள படேல் ஸ்டேடியத்திலும் நடக்கிறது. கால் இறுதி ஆட்டங்கள் கோவா, மும்பை ஆகிய ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. அரை இறுதி போட்டி கோவாவிலும் இறுதிப்போட்டி மும்பையிலும் அரங்கேறுகிறது.
Input & Image courtesy: News