ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் கப்திலின் அதிரடி!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் கப்திலின் அதிரடி!

Update: 2021-02-25 11:18 GMT

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. கடந்த 22ம் தேதி நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் நியூசிலாந்து அணியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் இன்று நியூசிலாந்தில் உள்ள டியுடின் மைதானத்தில் இரண்டாவது டி-20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. 

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் கப்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் மறுமுனையில் செய்ஃபெர்ட் 3 ரன்களில் அவுட் ஆக பின்னர் வந்த கேப்டன் வில்லியம்சன் 53 ரன்கள் அடித்து அசத்த அவரை தொடர்ந்து நீசம் 45 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். கப்தில் 97 ரன்கள் அடிக்க நியூசிலாந்து அணி 219 ரன்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர் வேட் 24 ரன்களும் பின்ச் 12 ரன்னிலும் அவுட் ஆக பின்னர் வந்த பிளிப் 45 ரன்களில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து மேக்ஸ்வேல் 3 ரன்களில் அவுட் ஆக பின்னர் வந்த ஸ்டோனிஸ் 78 அடித்து அசத்த கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் சாட்னர் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

Similar News