சன் ரைசர்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் கேதார் ஜாதவ் தான் விவிஎஸ் லெக்ஷ்மனன் தகவல்.!

சன் ரைசர்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் கேதார் ஜாதவ் தான் விவிஎஸ் லெக்ஷ்மனன் தகவல்.!

Update: 2021-02-20 15:15 GMT

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் சென்னையில் நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் கைவசம் இருக்கும் தொகையை வைத்து தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தன.வழக்கத்திற்கு மாறாக இந்த தொடரில் இளம் வீரர்கள் பலர் நல்ல விலைக்கு ஏலம் போனது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

அதே போல் கடந்த தொடரில் கடுமையான விமர்ச்சனங்களை எதிர்கொண்ட கேதர் ஜாதவை 2 கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்ததும் பலருக்கு கடும் அதிர்ச்சியையும் கொடுத்தது.கேதர் ஜாதவை அணியில் எடுத்தது மிகப்பெரும் முட்டாள்தனம் என ஹைதராபாத் ரசிகர்களே சமூக வலைதளங்கள் மூலம் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கேதர் ஜாதவின் எண்ட்ரீ சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் ஆர்டரை நிச்சயம் வலுப்படுத்தும் என ஹைதராபாத் அணியின் பயிற்சியாளரான விவிஎஸ் லக்‌ஷ்மன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விவிஎஸ் லக்‌ஷ்மன் பேசுகையில், “அனுபவ வீரரான கேதர் ஜாதவ் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் ஆர்டரை நிச்சயம் வலுப்படுத்துவார். ஹைதராபாத் அணியில் நீண்ட காலமாக மிடில் ஆர்டர் பிரச்சனை நிலவி வருகிறது, அது தற்போது கேதர் ஜாதவால் சரியாகும் என நம்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டிலும் கேதர் ஜாதவ் அனுபவமுள்ளவராக இருப்பதும் ஹைதராபாத் அணிக்கு பலம் தான். அதே போல் பந்துவீச்சிலும் அவர் சிறப்பாக செயல்படுபவர் என்பதால் கேதர் ஜாதவை அணியில் எடுத்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Similar News