விளையாட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கும் மோடி அரசு: கேலோ இந்தியா செய்த சாதனை!
விளையாட்டுக்கு உகந்த சூழலை நமது அரசு தொடர்ந்து உருவாக்கும் என நம்பிக்கை.
கேலோ இந்தியா முன்முயற்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில் திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் அதன் பங்களிப்பைப் பிரதமர் பாராட்டியுள்ளார். சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இந்தியா சிறப்பாக செயல்பட பிரதமர் மோடி மிகப்பெரிய ஆதரவு அளித்து வருகிறார். கடந்த சில மாதங்களில் கேலோ இந்தியா, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு, கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டில் 15 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளனர்.
கேலோ இந்தியா தடகளம் முக்கியமானதாக இருக்கிறது. இது, நாட்டுக்கு பெருமையை ஏற்படுத்திக் கொடுக்கிறது. கேலோ இந்தியா திட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் ரூ.270 கோடியில் நடைபெறுகிறது என அவர கூறினார். கேலோ இந்தியா முன்முயற்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில் திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் அதன் பங்களிப்பைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூரின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது, 5 ஆண்டுகளை நிறைவு செய்து, திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து, தடகள வீரர்களுக்கு சிறந்த தளத்தையும் உருவாக்கியுள்ள கேலோ இந்தியா முன்முயற்சிக்குப் பாராட்டுகள். இந்தியாவில் விளையாட்டுக்கு உகந்த சூழலை நமது அரசு தொடர்ந்து உருவாக்கும்.
Input & Image courtesy: News