கே.எல். ராகுலை ஆஸ்திரேலியா தொடரில் எப்படி வீழ்த்துவது என எனக்கு தெரியும் மேக்ஸ்வெல் அதிரடி.!
கே.எல். ராகுலை ஆஸ்திரேலியா தொடரில் எப்படி வீழ்த்துவது என எனக்கு தெரியும் மேக்ஸ்வெல் அதிரடி.!
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி-20 போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு ஆஸ்திரேலியா புறப்பட்டது. தற்பொழுது ஆஸ்திரேலியாவில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் டி -20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு கோலி தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது.
எதிர்வரும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடரில் கே.எல் ராகுலின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேக்ஸ்வெல் பேசுகையில், “‘ரோகித் சர்மா மிகவும் சிறந்த பேட்ஸ்மேன். தொடர்ச்சியாக தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடும் ரோகித் சர்மா, மூன்று இரட்டை சதங்கள் விளாசியுள்ளார். ஆகவே, அவர் அணியில் இல்லாமல் இருப்பது எப்போதும் மற்ற அணிகளுக்கு நேர்மறையான விசயமாகத்தான் இருக்கும்.
ஆனால் இந்திய அணி சிறந்த பேக்-அப் வீரர்களை வைத்துள்ளது. ஏராளமானோர் அந்த இடத்திற்கு உள்ளனர். கேஎல் ராகுலை பார்த்தீர்கள் என்றால், ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தொடக்க வீரராக இறங்கினாலும் சரி, இறங்காவிட்டாலும் சரி, அவர் சிறந்த வீரராக விளங்குவார் என்பதை உறுதியாக கூற இயலும். என்னிடம் அவரை வீழ்த்தும் வியூகம் குறித்து கேட்ட போது அதற்கான வழிகளை சொன்னேன்.
அவரது விக்கெட்டை ரன் அவுட் செய்து வீழ்த்தலாம் எனவும் சொல்லி இருந்தேன். இது அவரது விக்கெட்டை வீழ்த்துவதற்கான வழிகளில் ஒன்றாக சொல்லியிருந்தேன் மயங்க் அகர்வால்- கேஎல் ராகுல் ஆகிய இரண்டு பேரும் சிறந்த வீரர்கள் என்பதை உறுதியாக சொல்வேன். பஞ்சாப் அணிக்கான வீரர்கள் அறையில் அவர்களுடன் நேரம் செலவழித்தது மகிழ்ச்சி. எல்லா திசையிலும் பந்துகளை விரட்டினர்.