ஒலிம்பிக் குத்துச்சண்டை. வெண்கலத்தை தட்டி தூக்கிய இந்திய வீராங்கனை !
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
69 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் துருக்கி வீராங்கனை புசநாஸ் சர்மேநெலியிடம் 50 என்ற கணக்கில் லவ்லினா தோல்வி அடைந்தார்.
ஆட்டத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை துருக்கி வீராங்கனை புசனேஸ் சம்மேநேலியின் ஆதிக்கம் மட்டுமே இருந்தது. 2வது சுற்றின்போது நடுவர் இரண்டு முறை எச்சரிக்கை விடுத்தும், அவர் கூறியதை சரிவரக் கேட்டுச் செயல்படாததால், இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயினுக்கு ஒரு புள்ளி குறைக்கப்பட்டது.
இருந்த போதிலும் தொடக்கத்தில் துருக்கி வீராங்கனைக்குச் சவால் விடுகின்ற வகையில்தான் லவ்லினா செயல்பட்டு வந்தார். ஆனால் சம்மேநேலியின் சில அதிரடியான பஞ்ச்கள் அவருக்கு கூடுதலான புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தது.
இதனிடையே இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் கடந்த 2018, 2019ம் ஆண்டு மகளிர் உலக குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். அது மட்டுமின்றி 2017, 2021ம் ஆண்டில் நடந்த ஆசிய குத்துச்சண்டைப் போட்டியிலும் லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source:Hindu Tamil
Image Courtesy:News 18 Tamilnadu, The hindu
https://www.hindutamil.in/news/sports/701079-lovlina-ends-with-bronze-medal-at-olympics-goes-down-to-turkish-marauder-surmeneli-in-semis.html