தனக்கு பரிசாக வந்த காரை பயிற்சியாளருக்கு அளித்து அழகு பார்த்த நடராஜன்.!

வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி உள்ளிட்டோரை ஊக்கப்படுத்தும் விதமாக, மஹிந்திரா நிறுவனத்தின் ஆனந்த் மஹிந்திரா கார் பரிசாக அளிக்கப்படும் அறிவித்திருந்தார்.

Update: 2021-04-01 13:51 GMT

மஹிந்திரா நிறுவனம் பரிசாக வழங்கிய காரை தனது பயிற்சியாளர் ஜெயபிரகாஷுக்கு அன்பாக அளித்து அழகு பார்த்த தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன்.

ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக விளையாடினார் நடராஜன். அவருடன் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி உள்ளிட்டோரை ஊக்கப்படுத்தும் விதமாக, மஹிந்திரா நிறுவனத்தின் ஆனந்த் மஹிந்திரா கார் பரிசாக அளிக்கப்படும் அறிவித்திருந்தார். அதன்படி அனைவருக்கும் கார் பரிசாக சில நாட்களுக்கு முன்னர் அளிக்கப்பட்டுள்ளது.


 



இந்நிலையில், தனக்கு பரிசாக வழங்கப்பட்ட காரை, தனது பயிற்சியாளரான ஜெயபிரகாஷுக்கு பரிசாக அளித்து அழகு பார்த்தார் நடராஜன். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News