இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்காக ஓற்றை ஆளாக போராடும் மேத்திவ்ஸ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்காக ஓற்றை ஆளாக போராடும் மேத்திவ்ஸ்!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இலங்கையில் உள்ள கலே மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இலங்கை அணி 135 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது.
அதை தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பினாலும் பின்னர் வந்த கேப்டன் ரூட் இலங்கை அணியின் பந்து வீச்சுகளை சிதறடித்தார். அதிரடியாக விளையாடிய ஜோ ரூட் இரட்டை சதம் வீளாச இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 421 ரன்கள் குவித்தது. ரூட் 228 ரன்கள் அடித்தார். பின்னர் விளையாடிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸை பொருமையாக எதிர்கொண்டது. தொடக்க ஜோடி குசல் பெரேரா மற்றும் திரிமானே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.
குசல் பெரேரா 62 ரன்கள் அடித்து அவுட் ஆக திரிமானே 111 ரன்கள் அடித்து அவரும் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த வீரர்களும் சொதப்ப மேத்திவ்ஸ் மட்டும் நிலைத்து விளையாடினார். சண்டிமல் 20 ரன்களும் டிக்குவெல்லா 29 ரன்களும் அடித்தனர். இலங்கை அணி 75 ரன்கள் முன்னிலையில் உள்ளது.