பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பங்கேற்ற உயர்நிலைக் கூட்டம்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான முதலாவது உயர்நிலைக் குழுக்கூட்டம் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-03-08 01:03 GMT

2024-பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான முதலாவது உயர்நிலைக் குழுக்கூட்டம் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 2024-பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான முதலாவது உயர்நிலைக் குழுக்கூட்டம் மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தலைமையில் நடைபெற்றது.


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய சார்பில் பங்கேற்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அத்துடன் இந்த ஆண்டு ஹேங்ஷவில் நடைபெற உள்ள ஆசிய போட்டிகளுக்கான தயார் நிலைகளின் தற்போதைய நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டம் குறித்துப் பேசிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ஆசியப் போட்டிகளில் நமது வீரர்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த ஆண்டு ஹேங்ஷவில் இந்தியா இதுவரையில்லாத பங்களிப்பை வழங்கும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார். சீனாவில் ஹேங்ஷவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கி அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிரான்ஸில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜுலை 26 அன்று தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News