மெஸ்சியை பின்னுக்குத் தள்ளினார் ரொனால்டோ !

Ronaldo Overtakes Messi.

Update: 2021-09-23 06:28 GMT

கால்பந்து விளையாட்டில் இரு முடிசூடா மன்னர்களாக விளங்குபவர்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி 
மெஸ்சிக்கு பார்சிலோனா மிக அதிக அளவில் சம்பளம் கொடுத்து வந்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரியல் மாட்ரிட் அதிக சம்பளம் கொடுத்தாலும் மெஸ்சியைவிட குறைவாகத்தான் வாங்கினார். மேலும், வணிக ஒப்பந்தம் உள்பட இதர வருமானத்திலும் மெஸ்சி முன்னிலை பெற்றிருந்தார்.

ரொனால்டோ யுவென்டஸ் அணிக்கு சென்ற பிறகு, அவரது சம்பளம் வெகுவாக குறைந்தது. தற்போது மெஸ்சி பார்சிலோனாவில் இருந்து விலகி பி.எஸ்.ஜி. அணிக்கு சென்றுள்ளார். இதனால் மெஸ்சி சம்பளம் குறைந்துள்ளது.

இந்த நிலையில் 2021-22 சீசனில் மெஸ்சியை விட ரொனால்டோ அதிக வருமானம் ஈட்டும் நபராக இருப்பார் என போர்ப்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. ரொனால்டோ வரியுடன் 125 மில்லின் டாலர் சம்பளம் பெறும் நிலையில், மெஸ்சி 110 மில்லியன் டாலரே பெறுவார் எனத் தெரிவித்துள்ளது.

மான்செஸ்டர் யுனைடெ் அணி ரொனால்டோவுக்கு போனஸ் உடன் சேர்த்து 70 மில்லியன் டாலர் சம்பளம் கொடுக்கிறது. வணிக ஒப்பந்தம் மூலம் 55 மில்லியன் வருமானம் ஈட்டுகிறார்.

மெஸ்சி சம்பளம் மற்றும் போனஸ் மூலம 75 மில்லியன் டாலர் ஈட்டுவார் எனத்தெரிவித்துள்ளது.

இச் செய்தி ரொனால்டோ ரசிகர்களை உற்சாகபடுத்தியுள்ளது !

Maalaimalar

Image : Insider

Tags:    

Similar News