20 ஓவர் உலக கோப்பை துபாயில் கோலாகலமாக தொடங்கவுள்ளது, அதற்காக அணிகளுக்குகிடையில் பயிற்சி ஆட்டங்களும் நடந்து வருகுன்றனர். இந்நிலையில் இந்த 20 ஓவர் உலக கோப்பையை கைபெற்றுப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த கோப்பையை இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
20 ஓவர் உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்குதான் அதிகமான வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இல்லாவிட்டாலும் அந்த அணி வலுவாக இருக்கிறது.
கேப்டன் மோர்கன் பேட்டிங்கில் சிறப்பாக இல்லாவிட்டாலும் அணியை வழிநடத்திச் செல்வதில் மிகவும் சிறந்தவர்.
20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவின் நிலை குறித்து எனக்கு தெரியவில்லை. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்துக்கு கடும் சவாலாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் குறைவான வாய்ப்பே இருக்கிறது. மேக்ஸ்வெல் ஒருவரே அந்த அணியில் சிறப்பாக இருக்கிறார்.
20 ஓவர் உலக கோப்பை நடைபெறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆடுகளங்கள் வித்தியாசமானது. ஐ.பி.எல். போட்டிகளில் இதை பார்க்க முடிந்தது. 150 முதல் 160 ரன் வரை நல்ல ஸ்கோராக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
Image : கிரிக்கெட்டணமொன்றே