கம்யூனிஸ்ட் பிரமுகர் மீது பாலியல் புகார் கூறிய சீன டென்னிஸ் வீராங்கனை !நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் தோன்றினார்!

சீன நாட்டை சேர்ந்தவர் பெங் சூவாய் 35, இவர் ஒரு டென்னிஸ் வீராங்கனை ஆவார். சீனாவின் முன்னாள் துணைப்பிரதமரும், ஆளும் கம்யூஜிஸ்டு கட்சி தலைவரான ஜாங் கோலி குறித்து சமூக வலைதளங்களில் பாலியல் குற்றச்சாட்டை பதிவு செய்திருந்தார். இதனை வெளியிட்ட பெங் சூவாய் அன்றைய நாள் முதல் காணாமல் போனார். பொது வெளியில் தோன்றவே இல்லை.

Update: 2021-11-21 12:41 GMT

அவரைப் பற்றிய எவ்வித தகவலும் வரவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது தெரியாமல் விளையாட்டு வீரர்கள் இருந்தனர். அவரை மகளிர் டென்னிஸ் சங்கம் பல முறை தொடர்பு கொள்வதற்கு முயற்சி செய்தும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. டென்னிஸ் வீராங்கனை காணாமல் போன சம்பவம் சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியது. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மகளிர் டென்னிஸ் சங்கம் வலியுறுத்தியது.

இந்நிலையில், மாயமான பெங் சூவாய் பொதுவெளியில் தோன்றிய வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது பீஜிங்கில் நடைபெற்ற குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியின்போது பெங் சூவாய் பங்கேற்றிருக்கிறார். அந்த வீடியோவில் குழந்தைகளுடன் சிரித்து மகிழ்ந்து அவர்களுக்கு ஆட்டோகிராப் ஒன்றையும் போடுகிறார்.

இதன் பின்னர் குழந்தைகளுடன் இணைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. கம்யூனிஸ்ட் தலைவர் மீது பாலியல் புகார் கூறிய விளையாட்டு வீராங்கனை நீண்ட நாட்களுக்கு பின்னர் பொது வெளியில் தோன்றியிருப்பது அந்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. சீனாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வியையும் எழுப்பப்படுகிறது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News