ஆஸ்திரேலியா அணியில் மீண்டும் இணைந்த மிட்செல் ஸ்டார்க் - பலமாகியது ஆஸ்திரேலியா அணி.!

ஆஸ்திரேலியா அணியில் மீண்டும் இணைந்த மிட்செல் ஸ்டார்க் - பலமாகியது ஆஸ்திரேலியா அணி.!

Update: 2020-12-13 13:30 GMT

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. பின்னர் நடைபெற்ற டி-30 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. அதை தொடர்ந்து இரு அணி வீரர்களும் நான்கு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் சந்திக்க உள்ளனர். இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். 


முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலேட் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்திய அணியின் கேப்டன் கோலி நாடு திரும்புகிறார். 


 இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகபந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் டி-20 போட்டி தொடரில் இருந்து திடிர் என விலகிய நிலையில் வரும் 17 ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.  இது ஆஸ்திரேலியா அணிக்கு மிகபெரிய பலமாக அமைந்துள்ளது. ஏற்கனவே கம்மிங்ஸ் மற்றும் ஹசெல்வுட் என இரு சிறந்த பவுலர்கள் உள்ள நிலையில் ஸ்டராகும் அணியில் இணைந்துள்ளார். ஸ்டார்க் பிங்க் பால் கிரிக்கெடில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர். 

Similar News