தோனியின் பெற்றோர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!
மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா நெகெட்டிவ் என்று வந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தாயார் தேவகி தேவி, தந்தை பான்சிங் ஆகியோர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி மருத்துவமனையில் தோனியின் பெற்றோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா நெகெட்டிவ் என்று வந்தது. மேலும் அவர்களுக்கு உடலில் எந்தவிதமான பாதிப்பு இல்லை என்று உறுதியானது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தோனியின் தந்தை சக்கர நாற்காலியில் சென்றார். அவருடன் தேவகி தேவியும் வீடு திரும்பினார்.
இந்த செய்தியை கேட்டு சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் தோனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பெற்றோர்கள் குணமடைந்த செய்தியை சிஎஸ்கே அணியை சேர்ந்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.